Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்பைடர் படத்தில் வில்லன் பரத்

15 செப், 2017 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Bharath-act-as-Villain-in-Spyder

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுமான 5 பாய்ஸ்களில் ஒருவர் பரத். ஷங்கர் தயாரித்த காதல் படத்தின் மூலம் புகழ்பெற்றார். செல்லமே, பிப்ரவரி 14, பட்டியல், என் மகன், வெயில் படங்களில் நடித்த அவர் திடீரென சின்ன தளபதி பட்டத்துடன் பழனி, சேவல் போன்ற படங்களில் ஆக்ஷ்ன் அவதாரம் எடுத்தார்.

அதுவரை இயல்பான கேரக்டரில் நடித்து வந்தவர் திடீரென ஆக்ஷ்ன் ஹீரோவானதை மக்கள் ஏற்கவில்லை. கண்டேன் காதலை படம் மட்டும் ஆறுதல் வெற்றியை கொடுத்தது. சமீபகாலமாக பரத் ஹீரோ என்று இல்லாமல் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடுகு படத்தில் அப்படியான கேரக்டரில் நடித்தார். தற்போது அவர் பொட்டு, கடைசி பென்ஞ் கார்த்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் எந்த ஆர்ப்பட்டமும் இல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள ஸ்பைடர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். மெயின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுவதை செய்து முடிக்கும் அடுத்த வில்லனாக நடித்திருக்கிறார். செல்லமே படத்திற்கு பிறகு பரத் எதிர்மறை கேரக்டரில் நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு பிறகு தனது சினிமா பயணத்தில் சில மாறுதல்களை செய்ய திட்டமிட்டிருக்கிறார். படத்தின் வெற்றியை பொறுத்து அது எந்த மாதிரியான மாற்றம் என்பது அமையும்.

Advertisement
ரிசார்ட்டில் கிடக்கும் எம்எல்ஏ.க்களை கண்டிக்காதது ஏன்? - கமல் கேள்விரிசார்ட்டில் கிடக்கும் ... வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்த கே.எஸ்.ரவிகுமார் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in