இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் டிரைலர் நேற்று இரவே திருட்டுத்தனமாக இணையதளங்களில் 'லீக்' ஆனது. இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற உள்ள விழாவில் டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், அதற்கு முன்னதாக நேற்று இரவு டிரைலரின் 'ரஃப் கட் வெர்ஷன்' வெளியாகிவிட்டது. உடனே தயாரிப்பாளர் தரப்பில் நள்ளிரவு 12 மணிக்கு டிரைலரை வெளியிட உள்ளதாக நேற்று இரவு 11 மணி அளவில் அறிவிப்பு வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளின் டிரைலர்களும் நள்ளிரவு 12 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது.
காலை 10 மணி நிலவரப்படி யு டியூபில் தெலுங்கு டிரைலர் 12,33,000-க்கும் மேற்பட்ட பார்வைகளையும், தமிழ் டிரைலர் 4,40,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்றிருந்தது. மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தெலுங்கு டிரைலரை மிகவும் வரவேற்றுள்ளார்கள். மகேஷ் பாபு இதுவரை நடித்துள்ள தெலுங்குப் படங்களில் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, பெரிய வெற்றியைப் பெறப் போவது நிச்சயம் என அவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.