ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திலீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம்லீலா. அறிமுக இயக்குனர் அருண்கோபி இயக்கியுள்ள இந்தப்படத்தை, 'புலி முருகன்' தயாரிப்பாளர் தொமிச்சன் முலக்குப்பாடம் தயாரித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திலீப், எப்போது ரிலீசாவார் (ஜாமீனில் தான்), இந்தப்படத்தையும் ரிலீஸ் பண்ணலாம் என விரக்தியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் இந்தப்படத்தை வரும் செப்-28-ல் ரிலீஸ் செய்வதாக படத்தின் இயக்குனர் அருண்கோபி தெரிவித்துள்ளார்.
திலீப் நீண்ட நாளைக்குப்பின் இந்தப்படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடித்துள்ளார்.. படத்தில் அவருக்கு எம்.எல்.ஏ கேரக்டர்.. ஆச்சர்யமாக இந்தப்படத்தில் அவரது அம்மா கேரக்டரும் அரசியல் களத்தில் பம்பரமாக சுற்றுபவராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் ராதிகா. இதன்மூலம் சுமார் 24 வருடங்களுக்குப்பின் மலையாள திரையுலகில் மீண்டும் அவர் அடியெடுத்து வைத்துள்ளார். படத்தின் கதாநாயகியாக பிரயாக மார்ட்டின் நடித்துள்ளார்.