'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஓணம் பண்டிகைக்கு வந்த படங்கள் நான்கும் ரசிகர்களை பெரிதும் திருப்திப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் அடுத்ததாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது மோகன்லால் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் 'வில்லன்' படத்தைத்தான். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் மோகன்லாலை வைத்து இயக்கியுள்ள நான்காவது படம் இது. தவிர தமிழ் சினிமாவில் இருந்து விஷால், ஹன்சிகா இருவரும் முதன்முறையாக இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அதனால் எதிர்பார்ப்பு சதவீதம் கூடிக்கொண்டே தான் செல்கிறது.
இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சுமார் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய நிலையில், இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல இயக்குனர் ஜோஷி பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் நாயகன் மோகன்லால் கலந்துகொண்டார்.. அதேசமயம் துப்பறிவாளன் பட ரிலீஸ் என்பதால் விஷால் இந்த விழாவில் பங்கேற்க இயலவில்லை.. சில காரணங்களால் ஹன்சிகாவும் கூட வரவில்லை. ஆனால முக்கிய கேரக்டரில் நடிக்கும் ராசி கன்னா இந்த விழாவுக்கு வருகை தந்து அசத்தினார்.