Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷங்கர் படத்தின் பிரமாண்டம் புலிகேசி-2விலும் இடம்பெறுகிறது

14 செப், 2017 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Shankars-graphics-continues-in-24-Pulikesi

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த படத்திற்காக சென்னையை அடுத்து பூந்தமல்லியில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தில் டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. அதில் வடிவேலு, பார்வதி ஓமணக்குட்டன் மற்றும் நூற்றுக்கணக்கான நடன மங்கைகளும் நடித்தனர்.

இந்த நிலையில், தற்போது அப்படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்படுகிறது. மேலும், இந்த படத்திலும் வடிவேலு இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வடிவேலு இளவட்டமாக ஸ்லிம் கெட்டப்பில் நடிக்கிறாராம். மேலும், முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகத்தில் நிறைய புதுமைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிம்புதேவன், டைரக்டர் ஷங்கர் படங்களில் வருவது போன்ற கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் கையாளப்போகிறாராம். குறிப்பாக மாயமந்திர ஜால வித்தைகள் கொண்ட ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளதாம். அந்த பாடலின் பெரும்பகுதி கிராபிக்ஸ் கொண்டு தான் உருவாக்கப்படுகிறதாம். ஆக, இம்சை அரசன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள்.

Advertisement
மேஜிக்மேன் விஜய்யின் ரோல் எப்படிப்பட்டது?மேஜிக்மேன் விஜய்யின் ரோல் ... யாருடனும் கூட்டு இல்லை; தனிக்கட்சி தொடங்குகிறார் கமல் யாருடனும் கூட்டு இல்லை; தனிக்கட்சி ...


வாசகர் கருத்து (1)

14 செப், 2017 - 17:32 Report Abuse
jackjoshua அஜித்துடன் ஜோடியாக நடித்த காரணத்தினால் இன்று வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைமைக்கு வந்து விட்டாரே பாவம் இந்த நடிகை .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in