Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேஜிக்மேன் விஜய்யின் ரோல் எப்படிப்பட்டது?

14 செப், 2017 - 16:30 IST
எழுத்தின் அளவு:
What-role-for-Magician-Vijay-in-Mersal?

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் மேஜிக்மேன்.

இதில் மேஜிக்மேன் விஜய்க்கு அதிரடியான வேடமாம். அதாவது அவர் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்கிறாராம். அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவராம். ஆனால், அந்த ஐந்து பேரையும் டாக்டர் விஜய் கொலை செய்ததாக அவர் மேல் பழி விழுந்து விடுமாம். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மெர்சல்.

கதைப்படி, மேஜிக்மேன் கெட்டவராக தெரிந்தாலும் அவர் செய்யும் கொலைகள் அனைத்தும் நல்ல நோக்கத்தில் தான் செய்யப்படுமாம். அந்த வகையில் மெர்சல் படத்தில் டாக்டர் விஜய் நல்லவராகவும், மேஜிக்மேன் விஜய் கெட்டவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அவர் எதற்காக அந்த கொலைகளை செய்கிறார் என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ் என மெர்சல் பட வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Advertisement
ஜீவனின் ஜெயிக்கிற குதிர படத்திற்கு ஏ சான்றுஜீவனின் ஜெயிக்கிற குதிர படத்திற்கு ... ஷங்கர் படத்தின் பிரமாண்டம் புலிகேசி-2விலும் இடம்பெறுகிறது ஷங்கர் படத்தின் பிரமாண்டம் ...


வாசகர் கருத்து (12)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
16 செப், 2017 - 13:51 Report Abuse
Tamilan ராஜாராணி மௌனராகம் ஜெராக்ஸ், தெறி சத்ரியன் ஜெராக்ஸ், மெர்சல் அபூர்வ சகோதரர்கள் ஜெராக்ஸ். சூப்பரப்பு....மக்கள் ஒன்னும் இளிச்சவாயங்கள் அல்ல. நீ காப்பி அடிச்சே காலம் தள்ள முடியாது இட்லி... கம்முன்னு உம் பேரை அட்லிக்கு பதிலா ஜெராக்ஸ் காப்பி ன்னு வெச்சுக்கயேன். பொருத்தமா இருக்கும்
Rate this:
SRam - India,இந்தியா
16 செப், 2017 - 13:32 Report Abuse
SRam இங்க ஒரு VMI அல்லக்கை...இன்னைக்கு போடற பிரியாணி க்கும்....நாளைக்கு நம்ம விக்கு மண்டையன் மூலமா மக்களை ஏமாத்தி ஒரு கவுன்சிலர் ஆவுற கனவுல எல்லா பக்கத்துலயும் வந்து ஓவரா கூவுது....
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
16 செப், 2017 - 01:28 Report Abuse
Tamilan ஏம்ப்பா இட்லி. உனக்கு சொந்தமா ஒரு கதை கூடவா எழுத தெரியாது????? உன் ஜெராக்ஸ் காப்பி புத்திய விடவேமாட்டியா????? உனக்கெல்லாம் கோடியில் சம்பளம்????? கலிகாலம்டா.....இதுவும் அபூர்வ சகோதரர்கள் ஜெராக்ஸ் காப்பியா???
Rate this:
Jaya Balan - Villupuram,இந்தியா
15 செப், 2017 - 10:34 Report Abuse
Jaya Balan கமாண்ட் எழுதுற உங்களை எல்லாம் நினைக்கும்பொழுது எங்களுக்கு ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது மக்களே. அது என்னன்னா திருடனுக்கு தெய்வம் துணை இருக்குமாம். அதுபோல நீங்கள் எல்லாம் இதை யாருக்காக .....எந்த தருதலைக்கோ? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
k.venkatesh - chinnai,இந்தியா
14 செப், 2017 - 22:04 Report Abuse
k.venkatesh அப்ப அபூர்வ சகோதரர்கள் கதைன்னு சொல்லுங்க .சரியா ?
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in