ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
கெளதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தவர் ஜீவன். அதையடுத்து ஹீரோவாகி விட்ட அவர் திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்கள் மூலம் பிரபலமானார். ஆனால் அவர் நடித்த கிருஷ்ணலீலை படம் வெளியாகாததால் அதையடுத்து சில வருடங்களாக அவருக்கு படங்கள் இல்லை. பின்னர் அதிபர் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜீவன், தற்போது ஜெயிக்கிற குதிர என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.
ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவனுடன் டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், தம்பிராமைய்யா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். கே.ஆர்.கவின் சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்த்தவர்கள், சில காட்சிகளை கத்தரிக்க சொன்னார்களாம். அப்படியில்லையென்றால் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கொடுப்போம் என்றார்களாம்.
ஆனால் அவர் சொன்ன காட்சிகளை நீக்கினால் முக்கிய கதையம்சமே போய் விடும் என்பதால் ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை என்று அந்த சான்றிதழை வாங்கி விட்டாராம் ஷக்தி சிதம்பரம். இதையடுத்து அடுத்த மாதம் இறுதியில் ஜெயிக்கிற குதிர படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.