ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சமீபத்தில் வெளியாகி பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டி. இந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார் ஷாலினி பாண்டே. தெலுங்கு தேச மக்கள் ஷாலினியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்க படம் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். ஷாலின் வருவதை அறிந்து அங்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ஏற்கெனவே சற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷாலினி தன்னை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை உரிமையாளர்கள். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் மருத்துவமனையிலேய ஓய்வெடுத்த ஷாலினி. அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஐதராபாத் திரும்பினார்.