Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்திரிகையாளரை சந்திக்க ஜோதிகா தயங்குவது ஏன்?

14 செப், 2017 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Why-Jyothika-not-meet-press-people?

தாங்கள் நடிக்கும் படத்தை மக்களிடம் மிகச் சரியாகக் கொண்டு போய் சேர்ப்பதில் ஹிந்தி நட்சத்திரங்களிடம் மற்ற மொழி நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஷாரூக் கான், சல்மான் கான், ஆமீர்கான் உள்ளிட்ட பல கோடி வசூலை அள்ளும் நடிகர்கள் கூட பல ஊர்களில் நடக்கும் பிரமோஷன்கள், பாகுபாடு இல்லாமல் அனைத்து மீடியாக்களுக்கும் பேட்டிகள் என அவர்களுடைய படங்கள் வெற்றிபெற பாடுபடுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் சில நடிகர், நடிகைகள் அவர்கள் நடிக்கும் படங்களைப் பற்றிய எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வர மாட்டார்கள். ஒரு சிலர் தேர்ந்தெடுத்து ஒரு சில மீடியாக்களுக்கு மட்டுமே பேட்டி கொடுப்பார்கள். அவர்களில் முதலிடம் நயன்தாராவுக்கு, அடுத்த இடம் ஜோதிகாவுக்கு. நயன்தாரா அவர் படம் பற்றி பேசச் சொன்னால் வாயே திறக்க மாட்டார். ஆனால், அவருடைய பினாமி தயாரிப்பு எனச் சொல்லப்படும் 'அறம்' படத்திற்காக சமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

ஜோதிகா அவருடைய கணவரான சூர்யாவின் நிறுவனம் தயாரிப்பில் நடித்து நாளை வெளிவரும் 'மகளிர் மட்டும்' படத்திற்காக எந்த பிரமோஷனுக்கும் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். சூர்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க சூர்யாவுக்கு நெருக்கமான இருவருக்கு மட்டும் பேட்டி கொடுத்திருக்கிறார். நேற்று நடந்த பத்திரிகையாளர் காட்சிக்கு கூட திடீரென வந்த ஜோதிகா அனைவருக்கும் நன்றி என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு விருட்டென்று போய்விட்டார். அவர் நாயகியாக முன்னணியில் இருந்த போது எந்த பேட்டியையும் கொடுக்க மாட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்த போதும் அதையே பின்பற்றுகிறார். ஜோதிகா பத்திரிகையாளரை சந்திக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.

சில கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தப்படும் படங்களே ஓடாமல் இருக்கும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களே படங்களைப் பற்றிப் பேசவில்லை என்றால் எப்படி படங்கள் ஓடும் என வருத்தப்படுகிறார்கள் படத்தை பணம் போட்டு வாங்கி வெளியிடுபவர்கள்.

Advertisement
ஒரு டிக்கெட் ஒரு ரூபாய் திட்டம்: துப்பறிவாளன் படத்தில் விஷால் அறிமுகம்ஒரு டிக்கெட் ஒரு ரூபாய் திட்டம்: ... கடைசி நேர சிக்கலில் மீண்ட 'துப்பறிவாளன்' கடைசி நேர சிக்கலில் மீண்ட ...


வாசகர் கருத்து (2)

Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
15 செப், 2017 - 04:45 Report Abuse
Neelaa அய்யா... ஜோதிகாவுக்கு வருவதே இரண்டு முகபாவங்கள் தான் கண்ணை உருட்டுவார்.. இல்ல 6 வயசு கொழந்த மாதிரி மழலைல பேசுவார்... இப்படியே டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவீதாவின் தயவில் இவ்வளவு படம் நடிச்சிட்டார் இப்போ, பத்திரிகைக்காரங்க கூட்டம் கூட்டி கேள்வி கேட்டா என்னத்த பதில் சொல்ல முடியும்? அதான் நைசா நழுவிக்கிடறாங்க.. இவங்க மாதிரி நடிகைங்கள சும்மா விட்டுடுங்க ப்ளீஸ்
Rate this:
RANJITH -  ( Posted via: Dinamalar Android App )
14 செப், 2017 - 11:55 Report Abuse
RANJITH பத்த வச்சிடீங்க.........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram
  Tamil New Film Bhaskar oru Rascal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in