ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சத்யஜோதி தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'விவேகம்'. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் படம், எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையவில்லை.
விவேகம் படம் வெளியாவதற்கு முன்புவரை அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்குவதாக சொல்லப்பட்டது. அதாவது, 'விவேகம்' படத்தை தொடர்ந்து, அஜித் மீண்டும் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து படம் பண்ணவிருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
இப்போது, அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினியை வைத்து இயக்கி வரும் '2.0' படத்தின் வேலைகள் முடிந்தததும், அஜித் பட வேலைகளை ஷங்கர் துவங்கவிருக்கிறார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
இது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக நம்பத் தகுந்த வட்டாரத்தகவல் தெரிவிக்கின்றன.