Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப்பின் நண்பரை காட்டிக்கொடுத்த மொபைல் டவர்

13 செப், 2017 - 17:52 IST
எழுத்தின் அளவு:
Dileep-friend-Nadhirsha-in-trouble

கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக போலீசிடம் சிக்கிய பல்சர் சுனில், தினசரி ஏதோ ஒரு விவகாரமான செய்தியை கொளுத்திப்போட்டு வருகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனை மேடம் என குறிப்பிட்டு போலீசாரின் பார்வையை அவர் பக்கமும் திருப்பினார். இந்தநிலையில் திலீப்பின் வலதுகரம் என சொல்லக்கூடிய அளவுக்கு அவரது நண்பராக விளங்கும் இயக்குனர் நாதிர்ஷா மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் பல்சர் சுனில்.

நடிகை கடத்தல் விவகாரத்தில் திலீப்பின் பெயர் அடிபட ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை, அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருபவர் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா தான். அதனால் தான் போலீஸாரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. இதனால் தானும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நாதிர்ஷா தனது முன் ஜாமீனுக்காகவும் விண்ணப்பித்துள்ளார். இந்தநிலையில் தனக்கு 25 ஆயிரம் ரூபாயை நாதிர்ஷா மூலமாக திலீப் தந்ததாக தற்போது கூறியுள்ளார் பல்சர் சுனில்.

இந்த தொகையை நாதிர்ஷா இயக்கிவந்த 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ஷூட்டிங் தொடுபுழாவில் நடைபெற்று வந்தபோது அந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் நாதிர்ஷாவிடம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தகவலை உறுதி செய்யும் விதமாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குறிப்பிட்ட தேதியில் தொடுபுழாவில் இருந்ததை அவரது மொபைல் டவர் காட்டியதாம். அந்த டவர் காட்டிய பகுதியில் அதே தேதியில் நாதிர்ஷா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனராம்.

Advertisement
ஓணம் ரிலீஸ் : வசூல் நிலவரம் என்ன..?ஓணம் ரிலீஸ் : வசூல் நிலவரம் என்ன..? துப்பாக்கி முனையில் நடிகைக்கு மிரட்டல்: உறவினர் கைது துப்பாக்கி முனையில் நடிகைக்கு ...


வாசகர் கருத்து (1)

Amirthalingam Sinniah - toronto,கனடா
14 செப், 2017 - 04:57 Report Abuse
Amirthalingam Sinniah மேலும் கூடிய. தகவல்களை சேகரிக்க வேண்டுமாயின், காவ்யா மாதவனின் சாமியாரை சிறையில். சந்தித்தால் நல்ல சம்பவங்களை கூறுவார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in