பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் முதன் முதலாக நடிக்க வந்த படம் ஒரு பக்கக் கதை. மூன்று வருடங்களுக்கு முன்பு 2014ம் ஆண்டு இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இரண்டாவது படமாக ஆரம்பமானது. புதுமுக நடிகை மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க டிசம்பர் 2014ம் ஆண்டு படம் ஆரம்பமானது.
அனைத்து வேலைகளும் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட போது பிரச்சனையில் சிக்கியது. படத்தின் கதையே மிகவும் விவகாரமாக, ஆபாசம் கலந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனால் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு தயாரிப்பாளர்கள் ரிவைசிங் கமிட்டி சென்றனர். அங்கு படத்தைப் பார்த்தபின் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்திற்கு சென்சார் கிடைத்ததையடுத்து படம் விரைவில் வெளியாக உள்ளது.