சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத், தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள இந்த படத்தற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தோழா படத்திற்கு பிறகு தெலுங்கிலும் கார்த்தியின் மார்க்கெட் எகிறியிருப்பதால் தெலுங்கில் இப்படம் காக்கி என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.
சதுரங்க வேட்டை படத்தை புதிய கதைக்களத்துடன் விறுவிறுப்பாக எடுத்த வினோத், இந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தையும் அதேபோன்று ஒரு வித்தியாசமான விறுவிறுப்பான போலீஸ் கதையில் இயக்கியிருக்கிறாராம். 2005ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம் வினோத். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், டிரைலர், இசை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.