பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படம் சாஹோ. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் அவருடன் ஸ்ரத்தா கபூர், மந்த்ரா பேடி, நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்பட பல ஹிந்தி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக செட் போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அமீர் பேட்டை பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
முக்கியமாக, இந்த படத்தில் பல ஹாலிவுட் டெக்னீசியன்களும் பணியாற்றுகிறார்கள். அந்த வகையில், ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் இந்த படத்திற்கு சண்டை பயிற்சி கொடுக்கிறார். தற்போது பிரபாஸை வைத்து அவர் இயக்கும் சண்டை காட்சி மூலம் சாஹோ படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறதாம்.