மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய படங்களில் பிரபலமாக இருந்த நடிகை லட்சுமி ராய், பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் லட்சுமி ராய் மிகவும் கவர்ச்சியாக பிகினி உடையெல்லாம் அணிந்து நடித்திருக்கிறார். ஜூலி 2 படத்தின் போஸ்டர்கள், டீசர்கள் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்கவில்லை, மாறாக ஏ சான்று அளித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இப்படத்தை தயாரித்து, வெளியிடும் பக்லஜ் நிகாலனி கூறுகையில், ஜூலி-2 படத்திற்கு ஏ சான்று தான் கிடைக்கும் என நம்பினேன். அது நடந்துள்ளது, எந்த கட்டும் இல்லாமல் ஏ சான்று கொடுத்துள்ளார்கள். இது வயது வந்தோர் மட்டுமே பார்க்க கூடிய படம். படத்தில் நிர்வாண காட்சியோ, டபுள் மீனிங் வசனங்களோ எதுவும் கிடையாது. சென்சார் போர்டு தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள் என்றார்.
ஜூலி 2 படத்தை தீபக் சிவதாஷினி இயக்க, விஜய் நாயர் மற்றும் பக்லஜ் நிகாலனி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.