ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூர். 40 ஆண்டுகளாக சினிமாவில் வலம் வரும் இவர், நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இப்போது புதிதாக பாடகராகவும் அவதரித்திருக்கிறார். அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் பேனி கான் என்ற படம் உருவாக உள்ளது. இதில் அனில் கபூரும், ஐஸ்வர்யா ராய்யும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். இதில் தான் அனில், பாட்டு பாடியிருக்கிறார். படத்தில் அவர் தோற்றுப்போன ஒரு பாடகராக நடிக்க உள்ளார்.
இதுகுறித்து அனில் கபூர் கூறுகையில், படத்தில் நான் பாட வேண்டும் என்று படக்குழுவினர் கேட்டனர். கை தேர்ந்த பாடகர்கள் பாடுவதை நீங்களே பாடினால் அது ரியலாக இருக்கும் என்று கேட்டனர். அதன்படி என்னால் முடிந்தளவுக்கு இரண்டு பாடல்களை பாடி கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.