'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருகிற 16ம் தேதி, கம்யூனிஸ்ட் கருத்தரங்கு நடக்கிறது. இதில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும், கேரள மாநில கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை கமல் மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து கமல், தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது.... "கேரள முதல்வர் பங்கேற்கு கோழிகோட்டில் நடக்கும் விழாவுக்கு நான் அழைக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் முடிய எல்லா சனிக்கிழமையும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். சிபிஎம்., விழாவிற்கு என் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.