ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'. சுமார் 5 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 75 கோடி வரை வசூலித்து மலையாள சினிமாவில் தனி சாதனையை படைத்தது. அதன் பின் இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் ஜீத்து ஜோசப் இயக்க கமல்ஹாசன், கௌதமி மற்றும் பலர் நடித்தார்கள். இங்கும் இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்போது இந்தப் படத்தின் சீன மொழி ரீமேக் உரிமையை சீன நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள அந்த கம்பெனியில் இதற்கான ஒப்பந்தத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் கையெழுத்திட்டார், அப்போது படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் உடனிருந்தார். இது பற்றிய தகவலை இருவரும் அவர்களது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது பற்றி மோகன்லால், “மலையாள சினிமாவுக்கு ஒரு பெருமையான விஷயம் இது. 'த்ரிஷ்யம்' படத்தின் வெற்றிக்காக பின்னால் இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.