Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாக சைதன்யா, சமந்தா திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு

13 செப், 2017 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Only-175-people-call-for-Samantha---Nagachaitanya-wedding

நட்சத்திர காதல் ஜோடிகளான நாக சைதன்யா, சமந்தா இருவரது திருமணம் அடுத்த மாதம் 6ம் தேதி கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்திற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இவர்களது கல்யாணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நான்கு நாட்கள் கோவாவில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் 6ம் தேதி இந்து முறைப்படியும், அக்டோபர் 7ம் தேதி கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின் ஐதராபாத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளது. திருமண சடங்குகள் இந்து, கிறித்துவ முறைப்படி நடக்க உள்ளதால், அதில் உறவினர்கள் அனைவரும் பங்கு பெறும் விதத்தில்தான் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். தெலுங்குத் திரையுலகிலிருந்து சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், அவரது மனைவி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்த் திரையுலகத்தில் சமந்தா யாரை அழைத்துள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை.

தமிழில் சமந்தா தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழ்த் திரையுலகத்திற்கென தனியாக சென்னையில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தும் ஐடியா அவருக்கு இல்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in