Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கம்யூனிஸ்ட் கருத்தரங்கில் பங்கேற்கிறார் கமல்

13 செப், 2017 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Kamal-to-attend-in-CPM-conclave

கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டர் மற்றும் டி.வி., நிகழ்ச்சி மூலம் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அன்றாட நடப்புகள் மீது கருத்து சொல்லி அரசியல்வாதிகளை அதிர வைக்கிறார். குறிப்பாக ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்ற கமல், அந்த மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன் வீட்டுக்கும் சென்றார். அவரிடம் சில அரசியல் ஆலோசனைகள் பெற்றதாக கூறிய அவர், விரைவில் நேரடி அரசியலுக்கு வருவேன் என்று மறைமுகமாக சொன்னார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மகளிர் பிரபு தலைவி நடிகை நக்மா, பா.ஜ.கவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் ஆகியோர் கமலை நேரில் சந்தித்து தங்கள் கட்சியில் சேருமாறு மறைமுக அழைப்பு விடுத்தனர்.

இதற்கிடையில் கமல், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஆர்வம் காட்டுவதாகவும், அதில் இணைய இருப்பதாகவும், அதனால்தான் அவர் கேரள முதல்வரை சந்தித்தார் எனவும் செய்திகள் வெளியாது. இந்த நிலையில் கமல் கேரளாவில் நடக்கும் கம்யூனிஸ்ட் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

வருகிற 16ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசிய மதவாத எதிர்ப்பு கருத்தரங்கு நடக்கிறது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடக்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கமல்ஹாசன் சிறப்புரையாற்றுகிறாராம். இதில் கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனும் கலந்து கொள்கிறார்.

Advertisement
போலி பேஸ்புக் மூலம் அவதூறு: எஸ்.வி.சேகர் போலீசில் புகார்போலி பேஸ்புக் மூலம் அவதூறு: ... அமெரிக்காவில் மட்டும் 800 தியேட்டர்களில் 'ஸ்பைடர்' ரிலீஸ் அமெரிக்காவில் மட்டும் 800 ...


வாசகர் கருத்து (18)

s t rajan - chennai,இந்தியா
13 செப், 2017 - 16:07 Report Abuse
s t rajan கம்யூனிஸ்ட்கள் மத்தியில் காங்கிரஸ் கைக்கூலியாகவும் மாநிலத்தில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திமுக அதிமுகவின் அடிமையாகப் பணி செய்யும் ஒர் கும்பல்.அது முற்றுமாக அழிய கமல் மலர்ந்திருக்கிறார்.
Rate this:
Prabu Naik - Bangalore,இந்தியா
13 செப், 2017 - 14:40 Report Abuse
Prabu Naik கமல் முதலில் தன்னுடைய கருத்தை தெளிவாக பேச கற்று கொள்ள வேண்டும். அடுத்த முதல்வர் தளபதிதான்.
Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13 செப், 2017 - 14:00 Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) இவரோ இவர் மக்களோ குறைந்த காசுக்கு நடித்தார்களா ? அல்லது நட்டமடைந்த தயாரிப்பாளருக்கு பணம் திருப்பி கொடுத்தார்களா ? அல்லது கீழ் தரமான காட்சிகளில் நடிக்காமல் இருந்தார்களா . மாணவ சமுதாயத்தை குட்டி சுவராகியதில் பெரும் பங்கு இவர் சார்ந்த குடும்பம் தான் .
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13 செப், 2017 - 13:29 Report Abuse
A.George Alphonse Mr.Kamalahasan is making a wrong calculation by joining hands with communist party which have no cooperation, support or sympathy from the people of our country. The party has already started to lost it's glory in it's strong hold states like West Bengal, Kerala and some small states. In Tamilnadu this party is totally rooted out and no one like this party and it's policis and this man is trying to hang on this party with it's useless policies will not give him any expected gain instead he will completely loose his name, fame and glamour which he is now. This man is "Aazham Theriyamal Kalai Vittu Vittu Kalam poora Kashta padapogirar". If he remains silent now without involving in any political activities, he may sp his remaining days peacefully and happily if not his life will be in miserable and pitiable condition thereafter.
Rate this:
N S Sankaran - Chennai,இந்தியா
13 செப், 2017 - 13:26 Report Abuse
N S Sankaran மதவாதம் அது பக்க வாதத்தை விட கூடியதா, இல்லை மித வாதத்துக்கு இணையானதா அதையும் தாண்டி கீல் வாதம் போல் திமிரானதா என்ற கேள்வியை தயவாய் கேட்பாய் இடது சாரி இளஞ்சேரனே என்று எதையாவது உளறி பினராய்க்கு நட்டு கழண்டுடும்.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in