'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் பிசினஸ் டல்லடித்துக் கிடந்தது. பெரிய பட்ஜெட் படங்கள்... அதுவும் வெற்றிபெற்ற படங்களை மட்டும் வாங்க ஆர்வம் காட்டிய சேனல்கள் மற்ற படங்களை வாங்க மறுத்தன.
இந்நிலையில் அமேசான் பிரைம் களத்தில் குதித்ததும், சாட்டிலைட் சேனல்கள் சுதாரித்துக் கொண்டன. இதனால் தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை சேனல்கள் இழந்துவிடும் நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட சேனல்கள் மளமளவென படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க ஆரம்பித்தன.
லேட்டஸ்டாக, 'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படங்களான 'கபாலி', 'தெறி', 'வேலையில்லா பட்டதாரி-2' ஆகிய 3 படங்களின் சாட்லைட் உரிமைகளையும் முன்னணி சேனல் ஒன்று வாங்கியிருக்கிறது.
இதில் விஜய் நடித்த 'தெறி' கடந்த ஆண்டு (2016) ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெளியானது. ரஜினியின் 'கபாலி' சென்ற ஆண்டு (2016) ஜூலை 22-ஆம் தேதி வெளியானது. தனுஷின் 'விஐபி-2' கடந்த மாதம் (ஆகஸ்ட்-2017) 11-ஆம் தேதி வெளியானது.
ரஜினி, விஜய், தனுஷ் என பெரிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படங்களின் சாட்லைட் உரிமை இதுவரை விற்கப்படாமல் இருந்தது. தற்போது நல்ல விலைக்கு பிசினஸ் ஆகி இருக்கிறது. இந்த படங்களுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வருகிற 27-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஸ்பைடர் படத்தின் சாட்லைட் உரிமையையும் முன்னணி சேனல் ஒன்று வாங்கியுள்ளது.