ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில், 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் 'மகளிர்மட்டும்'. இந்த படம் வருகிற 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில் பப்ளிசிட்டியை இறுக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் 2டியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இந்த விஷயம் அறிந்ததும் படத்தின் இயக்குநர் பிரம்மா இது பற்றி கேட்டிருக்கிறார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டது, அதனால் தான் இப்படி என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் பிரம்மா டென்ஷனாக்விட்டாராம். இது குறித்தும் தன்னுடைய அதிருப்தியை பிரம்மா தெரிவித்திருப்பதாகவும், வெளிநாட்டில் இருக்கும் சூர்யா வந்த உடன் இது குறித்து பஞ்சாயத்து இருக்கும் என்கிறார்கள் மகளிர் மட்டும் படக்குழுவினர்.