டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வாயை மூடி பேசவும், ஒகே கண்மணி ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் 'சோலோ' என்கிற படம் வெளியாக இருக்கிறது. இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி என்பவர் இயக்குகிறார். துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.
தெலுங்கில் ஹிட் அடித்த 'பெல்லி சுப்புலு', எவிடே சுப்ரமண்யம் படங்களின் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் தனுஷின் வி.ஐ.பி-2 படத்திலும் நடித்திருந்தார். தவிர தற்போது கௌதம் மேனன் டைரக்சனில், விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ரிது வர்மா. இந்தப்படத்திற்காக ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்ட ரிது, தற்போது துருக்கியில் நடைபெற்று வரும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர கலையரசனுடன் 'சைனா' என்கிற படத்திலும் நடித்துவருகிறார் ரிது வர்மா.