ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் 'ராவண தேசம்' என்ற படத்தை இயக்கிய அஜய் ஆன்ட்ரூஸ் நுத்தகி, தற்போது மஞ்சு மனோஜ், அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர் நடிக்கும் 'நான் திரும்ப வருவேன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள 'ஒக்கடு மிகிலா என்ற படத்தின் தமிழ் டப்பிங்தான் இந்தப் படம். படத்தை முதலில் செப்டம்பர் மாதம் வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டார்கள்.
இந்தப் படம் விடுதலைப் புலிகள் பற்றிய படம் என்பதால் படத்தில் ஆட்சேபகரமான பல காட்சிகள் இருப்பதாக சென்சார் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 40 நிமிடம் இடம் பெறும் கடலில் படமாக்கப்பட்ட அந்தக் காட்சிகளுக்கு சென்சார் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்.
அந்தக் காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்திற்கு சான்றிதழ் தருவதாகவும் சொல்கிறார்களாம். அதனால் படக் குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளார்கள். அந்த 40 நிமிடக் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டான காட்சிகளாம். அவற்றை நீக்கிவிட்டால் படத்தில் ஒன்றுமே இருக்காது என படக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு வந்த பிறகே படம் வெளியாகும் என்கிறார்கள்.