மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாவில் எது, எப்போது, எப்படி நடக்கும் என்று சொல்லவே முடியாது. எதிர்பார்க்கும் படங்கள் தோல்வியைத் தழுவும், எதிர்பாராத படங்கள் மாபெரும் வசூலைக் குவிக்கும். தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் அனைவர்யும் வியக்க வைத்த படம் 'அர்ஜுன் ரெட்டி'.
பிரனாய் ரெட்டி தயாரிக்க சந்தீப் ரெட்டி இயக்க விஜய் தேவரகொன்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியான படம்தான் 'அர்ஜுன் ரெட்டி'.
தெலுங்குத் திரையுலகின் கடந்த சில வருட வெற்றிப் படங்களில் இந்தப் படத்திற்கும் தனி இடமுண்டு என்று சொல்லுமளவிற்கு இப்படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. இந்தப் படத்திற்குப் பின் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பைசா வசூல்' படம் கூட 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் வசூலுக்கு முன்னால் அடங்கிப் போக வேண்டியதாகிவிட்டது.
இப்படத்தின் தயாரிப்பாளர் பிரனாய் ரெட்டி படத்தைத் தயாரிக்க வெறும் 4 கோடி ரூபாய்தான் முதலீடு செய்துள்ளார். ஆனால், படத்தின் தியேட்டர் வசூல் மட்டுமே 40 கோடியைக் கடந்துள்ளது. படத்தின் தமிழ், கன்னட, ஹிந்தி உரிமைகளும் நல்ல விலைக்கு பேசப்பட்டு வருகின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் தற்போதைய ஹாட் - டாபிக்கே 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் முதலீடும், வசூலும் பற்றியதாகத்தான் இருக்கிறது. பெரிய விளம்பரங்கள் எதுவும் இன்றி ரசிகர்களின் வாய் வழிப் பேச்சால் மட்டுமே படம் இந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.