ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இவன் தந்திரன் படத்தை அடுத்து கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் ஹர ஹர மகாதேவகி. இம்மாதம் இறுதியில் திரைக்கு வரும் இந்த படத்தில் கெளதம் கார்த்தியுடன் நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ஆடியோ வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரைலரில் டபுள் மீனிங் டயலாக்குகள் இடம்பெற்றிருந்தன. அதனால் டிரைலரிலே இப்படின்னா படத்தில் இன்னும் ஜாஸ்தியா இருக்கும் போலருக்கே என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து காமெடியன் சதீஷ் கூறும்போது, ஹர ஹர மகாதேவகி படத்தின் டிரைலரை பார்த்துட்டு என்கிட்டயே நண்பர்கள் சிலர் ஆபாச டயலாக் இருக்குதான்னு கேட்டாங்க. ஆனா அவங்க கேட்ட அளவுக்கு இருக்குதான்னு எனக்கு தெரியல. என்னைக்கேட்டா டபுள் மீனிங் வசனங்கள் தான் படத்தில் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன் என்கிறார் சதீஷ்.