ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ஜெய்லவகுசா. இந்த படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது படம் ரிலீசுக்கு தயராகி விட்ட நிலையில், இப்படத்தில் ஐந்து நாயகிகள் நடித்திருக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில், ஜெய்லவகுசா படத்தில் ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருக்க, தமன்னா, நந்திதா ராஜ், ஹம்சா நந்தினி ஆகியோரும் நடித்திருக்கிறார்களாம். இவர்களில் தமன்னா ஜூனியர் என்டிஆருடன் ஒரு பாடலுக்கு நடனமாட, மற்ற இரண்டு நடிகைகளும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்களாம்.