ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹர ஹர மகாதேவகி. இந்தப் படத்தை சூர்யாவின் உறவினரும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனருமான கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். பாடல்களிலும் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
விரைவில் ரிலீசாகவிருக்கிற ஹர ஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து மீண்டும் கௌதம் கார்த்திகை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. இந்த படத்தையும் ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கியிருக்கும் சந்ஹோஷ் பி.ஜெயகுமார் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு பலான புத்தகக்கதையில் பிரபலமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தைத் தொடர்ந்து சரோஜாதேவி என்ற படத்தையும் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.