ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் 'துப்பறிவாளன்' படம் செப்டம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீசர், டிரைலர் ஆகிய இரண்டும் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் வித்தியாசமான இயக்குனர் எனப் பெயரெடுத்த மிஷ்கின் முதன் முறையாக கொஞ்சம் பெரிய ஹீரோவை இயக்கிய படம்.
மிஷ்கின் இயக்கத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அஞ்சாதே' படத்திற்குப் பிறகு அதன் பின் அவர் இயக்கிய 'நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு' ஆகிய ஐந்து படங்களும் தோல்வியைத்தான் தழுவின. 'யுத்தம் செய்' படம் மட்டும்தான் கொஞ்சம் சுமாராக ஓடியது.
விஷால் நடித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'பாண்டிய நாடு' படத்திற்குப் பின் அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி, மருது, கத்திச் சண்டை' ஆகிய 7 படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்து வந்த மிஷ்கின், விஷால் இருவருமே 'துப்பறிவாளன்' படம் பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதற்கேற்றபடி படத்திற்கும் வினியோக வட்டாரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். தமிழ்நாட்டில் சுமார் 400 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.