ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிருத்விராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி ரிலீசுக்கு தயாராகிவரும் படம் தான் 'மை ஸ்டோரி'.. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரை இப்போது வெளியிட்டுள்ளனர். மொய்தீன்-காஞ்சனமாலா என வரலாற்று காதல் ஜோடியாக 'என்னு நிண்டே மொய்தீன்' படம் மூலம் நம்மை கவர்ந்த பிருத்விராஜ்-பார்வதி இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் ஜெய்-தாரா என புதிய ஜோடியாக கலக்க இருக்கின்றனர். இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்குகிறார் இந்த ஜோடியின் முந்தைய பட சாயல் எதுவும் இதில் வந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொண்டு படத்தை இயக்கியுள்ளாராம். மியூசிக், ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக இந்தப்படம் உருவாகி இருக்கிறதாம்.
கேரளாவில் மட்டுமல்லாமல் போர்ச்சுக்கல்லிலும் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்களாம்.. இவர் காஸ்ட்யூம் டிசைனர், ஸ்டைலிஸ்ட்டாக இருந்து இயக்குனராக மாறியுள்ளார். எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு(ராண்டி) தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர். ஷான் ரகுமான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் கதை தொண்ணூறுகள் மற்றும் இன்றைய தேதி என இரண்டு காலகட்டங்களில் நிகழ்கின்றனவாம்.