பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, கன்னிப்பருவத்திலே படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது குணசித்திர நடிகராக நடித்து வருகிறார் நடிகர் ராஜேஷ். தமிழ் சினிமாவில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான நடிகர்களில் ஒருவர். தற்போது அவர் சின்னத்திரையில டாக் ஷோ ஒன்றை நடத்த வந்திருக்கிறார்.
சின்னத்திரையில் இதுவரை விசு, டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் உள்பட சிலர் டாக் ஷோக்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்போது ராஜேஷ் நடத்த வந்திருக்கிறார். வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இது உங்க மேடை என்ற விவாத நிகழ்ச்சியை நடத்துகிறார். வாரம்தோறும் ஞாயிறு காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். பல்வேறு தலைப்புகளில் உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள், பெண்களை நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து அவர்களை விவாதம் செய்ய வைத்து அதற்கு தீர்வு சொல்லி வருகிறார். சமூக பிரச்சினையும், தனிமனித ஒழுக்கமும் நிகழ்ச்சியின் மைய கருத்தாக இருக்கிறது.