பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் தற்போது வரை பாக்ஸ் ஆபீசில் நல்லதொரு வசூலை பெற்று வருகிறது. இதனால் அக்ஷயின் திரை வாழ்வில் மிகப் பெரிய ஹிட் படமாக இப்படம் உருவாகி உள்ளது.
டாய்லெட் ஏக் பிரேம் கதா படம், அக்ஷயின் முந்தைய வெற்றி படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. 2012 ம் ஆண்டு அக்ஷய் நடிப்பில் வெளிவந்த ரவுடி ரத்தோர் படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.133.25 கோடியை வசூலித்தது. இது தான் அக்ஷய் படங்களின் அதிகபட்ச வசூல் சாதனையாக கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது டாய்லெட் ஏக் பிரேம் கதா, இந்த வசூல் சாதனையை முறியடித்து ரூ.133.60 கோடியை வசூலித்துள்ளது.