‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன் மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ரிலீஸானது. இயக்குனர் லால் ஜோஸின் டைரக்சனில் மோகன்லால் முதன்முதலாக நடித்துள்ள படம் என்பதால் ரிலீசாவதற்கு முன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், பெரிய அளவில் ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை. இந்தநிலையில் பி.உன்னிகிருஷ்ணன் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள 'வில்லன்' படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
இந்த செப்டம்பர் மாத இறுதியிலேயே அந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஈடுபட்டிருந்தார்.. ஆனால் மோகன்லால் தரப்பில் இருந்து இந்த மாதம் இந்தப்படத்தை ரிலஸ் செய்யாமல் அடுத்த மாதம் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்களாம். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விஷால் மலையாளத்தில் முதன்முதலாக கால்பதிக்கிறார்.
அதேசமயம் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படம் வரும் செப்-14ல் ரிலீசாக இருப்பதால், தன்னுடைய இன்னொரு படமும் இதே மாதத்தில் ரிலீசாவதை விஷால் விரும்பவில்லை என்றும், அவரும் தயாரிப்பாளர் தரப்பில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.