'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பிருத்விராஜ் நடித்துள்ள 'ஆடம் ஜான்' படம் சமீபத்தில் ரிலீஸாகி டீசன்டான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரணம் என்கிற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பிருத்விராஜ்.. பிருத்விராஜ் - நிவின்பாலி இருவரும் இணைந்து நடித்து, கடந்த 2015ல் வெளியான 'இவிடே' படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த நிர்மல் சகாதேவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் உள்ள ஸ்ட்ரீட் கேங்ஸ் பற்றிய கதை தான் இது.. அதனால் தான் படத்திற்கு 'டெட்ராய்ட் கிராஸிங்' என டைட்டில் வைத்து, தற்போதுதான் அதை 'ரணம்' என மாற்றியுள்ளனர்.
டெட்ராய்டில் பல்வேறு ஸ்ட்ரீட் கேங்ஸ் இயங்கி வருகின்றன. அங்கே நம் தமிழ் ஆட்களும் தனித்தனியாக ஸ்ட்ரீட் கேங் உருவாக்கி வைத்துள்ளார்களாம்.. இவர்களுக்குள் நடக்கும் மோதல், இந்த கேங் ஒன்றில் இருக்கும் நாயகன் பிருத்விராஜ், இதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.. இந்தப்படத்தை மலையாளம், தமிழ் என இருமொழியில் உருவாக்குகிறார்களாம். இதில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் மம்ம்தா மோகன்தாஸ்..
ஆனால் இந்தப்படம் ஆரம்பிக்க தாமதாகவே, மம்தாவின் தேதிகள் வீணானதுடன், தற்போது அவர் பஹத் பாசிலுடன் 'கார்பன்' என்கிற படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.. ஆகவே மம்தாவுக்கு பதிலாக ஆந்த கேரக்டரில் நடிக்கிறார் இஷா தல்வார்.. 'தட்டத்தின் மறயத்து' படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இஷா தல்வார் தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.