ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லாலின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வரும் படமாக தற்போது காசி, பனராஸ் பகுதிகளில் உருவாகி வருகிறது ஒடியன். புலி முருகன் படத்தைவிட மிஞ்சும் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப்படத்தை விளம்பரப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க, முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். புலி முருகன் படத்தை மிஞ்சும் வகையிலான சண்டைக்காட்சிகள் இந்தப்படத்தில் இடம் பெறுகின்றனவாம்.
இதற்காக சண்டைக்காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலூத்த முடிவு செய்த பீட்டர் ஹெய்ன், இதற்காக தன்னை தேடிவந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்களையும் உதறித்தள்ளி விட்டாராம். இந்த வருடம் புலி முருகன் படத்தில் சண்டைக்காட்சிகளுக்காக தேசிய விருது வாங்கிய பீட்டர் ஹெய்ன், ஒடியன் படத்திற்கும் அதைவிட அதிக உழைப்பை தர முடிவு செய்துவிட்டார். இதற்காக மொத்தம் 5௦ நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள பீட்டர் ஹெய்னுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் வீதம் மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.