பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற உள்ளது. அடுத்த வாரம் 15ம் தேதி ஐதராபாத்தில் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ், தெலுங்கில் ஸ்பைடர் படத்தைத் தயாரித்துள்ள இந்தப் படத்தை உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தமிழில் 'கபாலி' படத்தின் வசூலையும், தெலுங்கில் 'பாகுபலி 2' படத்தின் வசூலையும் இந்தப் படத்தால் நிச்சயம் பிடிக்க முடியாது என்றாலும், அந்தப் படங்களுக்கு அடுத்து வசூலில் சாதனை புரிந்த படம் என்று கொண்டு வர அதிகமான தியேட்டர்களில் வெளியிட உள்ளார்களாம்.
தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் சுமார் 2000 தியேட்டர்கள் வரையும் உலக அளவில் மேலும் 2000 தியேட்டர்களிலும் வெளியிட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். மகேஷ் பாபு நடித்து இதற்கு முன் வெளிவந்து சாதனை படைத்த 'ஸ்ரீமந்துடு' படத்தின் வசூலை 'ஸ்பைடர்' படம் நிச்சயம் முறியடிக்கும் என்கிறார்கள். அதே சமயம், தெலுங்கில் 'பாகுபலி' அல்லாத படத்தின் வசூலில் முதலிடத்தைப் பிடிக்குமா என்பது இந்த மாதக் கடைசியில் தெரிய வரும்.