ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, எமன் படம் வரை ஆறு படங்களில் நடித்து விட்டார். அதில், பிச்சைக்காரன் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி அங்கும் அவருக்கு ஒரு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், எமன் படத்தை அடுத்து தற்போது அண்ணாதுரை, காளி என்ற இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறார்.
இதில் அண்ணாதுரை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதையடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கும் காளி படத்தில் நடிக்கிறார். இதுவரை விஜய் ஆண்டனி நடித்துள்ள அனைத்து படங்களிலுமே பிரபலமில்லாத நாயகிகள்தான் நடித்துள்ளனர். ஆனால், காளி படத்தில் முதன்முறையாக பிரபல நடிகை அஞ்சலி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த தகவலை அப்பட டைரக்டரான கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு, அஞ்சலியின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதன்காரணமாக எனது படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். அவருடன் பணிபுரியும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.