பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் ஸ்பைடர். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். பரத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது சூப்பர் நேச்சர் சயின்ஸ் பிக்சன் படம். இதனை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்பைடர் படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா நாளை(செப்., 9) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. பாடல் வெளியீடாக மட்டும் இல்லாமல் மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இதனை நடத்துகிறது இப்படத்தை தமிழ்நாட்டு உரிமத்தை பெற்றுள்ள லைகா நிறுவனம்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். 2.ஓ படத்தை தயாரிப்பதும், மருதநாயகம் படத்தை தயாரிக்க இருப்பதும் லைகா நிறுவனம் தான் என்பதால் ரஜினி, கமல் கலந்து கொள்வது உறுதியானது. விழாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.