Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல நடிகர் ஆர்என் சுதர்சன் காலமானார்

08 செப், 2017 - 14:11 IST
எழுத்தின் அளவு:
Actor-RN-Sudharsan-pasess-away

தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் ஆர்என் சுதர்சன் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதர்சன், சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்., 8) காலமானார்.

கர்நாடக மாநிலத்தில் 1939-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறந்தவர் சுதர்சன். இவரது தந்தை ஆர்.நாகேந்திரா ராவ், கன்னட சினிமாவின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமானவர். சினிமா குடும்பத்திலிருந்து வந்ததால் என்னவோ, சுதர்சனும் தனது 21வது வயதில், தந்தை இயக்கிய, "விஜயநகரடா வீரபுத்ரா" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். 60 படங்களில் ஹீரோவாக நடித்தவர் பின்னர், வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.

தமிழில், "தீர்ப்பு, சுமதி என் சுந்தரி, நாயகன், புன்னகை மன்னன், பாயும் புலி, வேலைக்காரன், ரமணா" உள்ளிட்ட பல படங்களிலும், பிற மொழிகளிலும் சேர்த்து சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் சுதர்சன்.

சுதர்சனுக்கு சைலாஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர் கன்னட சினிமாவின் மாஜி ஹீரோயின் ஆவார். சைலாஸ்ரீ உடன் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் சுதர்சன்.

சுதர்சனின் சகோதர்களான ஆர்என்.கிருஷ்ணா பிரசாத் மற்றும் ஆர்என் ராஜகோபால் ஆகியோரும் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in