பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சிவகார்த்திகேயனின் '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் முதலானோர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தை முதலில் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். அந்த தேதியில் விவேகம் களத்தில் இறங்கியதால், வேலைக்காரனின் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
பிறகு தீபாவளிக்கு 'வேலைக்காரன்' வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருபபதால் வேலைக்காரன் படத்துக்கு 100 தியேட்டர்கள் கூட கிடைக்காது என்ற யதார்த்தத்தை விநியோகஸ்தர்கள் எடுத்துச்சொன்னதும், தற்போது வேலைக்காரன் படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.