துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
டைரக்டர் ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. அந்த படத்தில் சிறப்பாக நடித்ததால் தற்போது மம்மூட்டியை வைத்து தான் இயக்கி வரும் பேரன்பு படத்திலும் அவரை மம்மூட்டியின் மகள் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ராம்.
இதேபோல் ராம் இயக்கிய முதல் படமான கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா. முதல் படத்தில் சிறப்பாக நடித்தவர் அதன்பின்னர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்தார். இப்போது காதல் கசக்குதய்யா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் அவர்.
இந்த படத்தில் பள்ளி மாணவியாக, துருவாவை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் வெண்பா. இதையடுத்து இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக நடித்து வரும் பள்ளி பருவத்திலே என்ற படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் வெண்பா.
இந்த படங்களைத் தொடர்ந்து என் திறமைக்கு சவால் விடக் கூடிய அழுத்தமான கதாநாயகி வேடங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறும் வெண்பா, இந்த படங்களைப்பார்த்து விட்டு நல்ல கதைகளுடன் இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.