Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்களுக்கு 'மகளிர் மட்டும்' போட்டி

07 செப், 2017 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Magalir-Mattum-contest-for-Male

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த படம் 'மகளிர் மட்டும்'. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

'மகளிர் மட்டும்' படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் எண்ணத்தில் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம். அதாவது ஆண்களை தியேட்டருக்கு வர வைக்கும் உத்தியாக, 'ஆண்களுக்கு மட்டும்' என்ற விதிமுறையோடு இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

''நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற நான்கு வரிகளும், அந்தப் பெண்ணுடனான உங்கள் செல்பியையும் அனுப்புங்கள்! அவர் உங்கள் அம்மாவாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ, காதலியாகவோ அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம், ஒரு பட்டுப்புடவையுடன்...'' என விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த போட்டி அறிவிப்பு ஆண்கள் மத்தியில் 'மகளிர் மட்டும்' படத்துக்கு வரவேற்பை அதிகரிக்க செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Advertisement
மலேசியாவில் 29 தியேட்டர்களில் 'நெருப்புடா'மலேசியாவில் 29 தியேட்டர்களில் ... பெப்சியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்: விஷால் உறுதி பெப்சியால் சிறு தயாரிப்பாளர்கள் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in