வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'மொட்ட சிவா கெட்ட சிவா', பி.வாசு இயக்கத்தில் 'சிவலிங்கா' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தபோது பரபரப்பாக இருந்தார் ராகவா லாரன்ஸ். அப்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலையைக்காட்டினார். ஆனால் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்களின் வசூல் பெரிதாக இல்லை. அதன் பிறகு லாரன்ஸ் பற்றிய செய்திகளே இல்லை.
இந்நிலையில், 'முனி'யின் 4ஆம் பாகமாக 'காஞ்சனா-3' படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. லாரன்ஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 'முனி'. ராகவா லாரன்ஸ், வேதிகா இருவரும் அந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த படத்தை தொடர்ந்து 'முனி'யின் 4ஆம் பாகமாக உருவாகவிருக்கும் 'காஞ்சனா-3' படத்தில் ராகவா லாரன்ஸும், வேதிகாவும் மீண்டும் இணைகிறார்கள்! இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.