பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஞ்சித் இயக்கத்தில் தற்போது 'காலா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத்ராஜ், அருள்தாஸ் என பார்த்து பார்த்து நட்சத்திரங்களை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ரஞ்சித். இந்தப்படத்தில் இன்னொரு மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் ஷாயாஜி ஷிண்டே. மும்பை தான் கதைக்களம் என்பதால் ஷாயாஜி ஷிண்டே பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கு முன் ரஜினியுடன் இணைந்து, 2002ல் வெளியான பாபா படத்தில் திவ்யானந்த பாரதி என்கிற சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாயாஜி ஷிண்டே. அந்த சமயத்தில் வெளியான பாரதியார் படத்தில் ஷாயாஜியின் நடிப்பு அனைவராலும் பிரமித்து பார்க்கப்பட்டது. தவிர 'பாபா' ரஜினியின் சொந்த தயாரிப்பு என்பதாலும் ரஜினியின் விருப்பத்தின்பேரில் பாபா படத்தில் ஷாயாஜி ஷிண்டேவும் இடம்பிடித்தார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.