பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அக்ஷ்ய் குமார், பரேஷ் ராவல் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த படம் "ஓ மை காட்". 2012-ம் ஆண்டு காமெடி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க எண்ணம் இருப்பதாக பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். தற்போது இவர், படேல் கி பஞ்சாபி ஷாதி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பிரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஓ மை காட் படத்திற்கான இரண்டாம் பாகம் வேலைகள் நடந்து வருகிறது. அதற்கான கதை உருவாக்கும் பணிகள் துவங்கியுள்ளது. கதையை பொறுத்து அக்ஷ்ய் மற்றும் நான் நடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
படேல் கி பஞ்சாபி ஷாதி படம் வருகிற செப்., 15-ம் தேதி ரிலீஸாக உள்ளது. பரேஷ் ராவல் உடன் ரிஷி கபூரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.