ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
விக்ரம் நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். பீட்சா படத்தின் இந்தி ரீமேக்கை இவர்தான் தயாரித்தார். மேலும் சில இந்தி படங்களையும் இயக்கியுள்ள பிஜாய் நம்பியார், தற்போது தமிழ், மலையாளத்தில் சோலோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் துல்கர்சல்மான் நாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தில் துல்கர்சல்மானுக்கு ஜோடியாக நேகா சர்மா, சாய் தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன் என நான்கு நடி கைகள் நடித்துள்ளனர். அதோடு பாலிவுட் நடிகர்கள் சிலரும் நடித்துள்ள இந்த படத்தில் சுகாசினி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த சோலோ படத்தை செப்டம்பர் 21-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் தற்போது ரிலீஸ் தேதியை அக்டோபர் 5-ந்தேதிக்கு தள்ளி வைத் துள்ளனர்.