'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஜெயம் படத்தில் அறிமுகமான சதா, தென்னிந்திய மொழிப்படங்கள் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழைப் பொறுத்த வரை கடைசியாக எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார் சதா. அதையடுத்து தற்போது தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கி வரும் டார்ச்லைட் என்ற படத்தில் நடிக்கிறார். 1980களில் நடக்கும் பீரியட் கதையில் இந்த படம் உருவாகிறது. அதனால் அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லைட் மற்றும் உடைகள் என ஒவ்வொரு விசயத் தையும் பார்த்து பார்த்து கவனமாக படமாக்கி வருகிறார் மஜீத்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் படமாக்கப்படுகிறது. கதைப்படி இந்த படத்தில் விலைமாதுவாக நடிக்கும் சதா, எப்படி அந்த தொழிலுக்கு வருகிறார் என்பதை உருக்கமாக சொல்லியிருக்கிறாராம் மஜீத். அந்த கதையை கேட்டபோது கண்கலங்கி சதா, இந்த மாதிரியான கதைகளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருந்தேன் என்று சொல்லி, அந்த விலைமாது வேடத்திற்காக முழுமையாக தன்னை தயார்படுத்திக்கொண்டு நடித்து வருகிறாராம்.
மேலும், இந்த டார்ச்லைட் படத்தில் நடிக்க முதலில் சிவாஜி கேர்ள் ஸ்ரேயாவைதான் அணுகினார்களாம். ஆனால் அவரோ, விலைமாது வேடம் தனது இமேஜை பாதித்து விடும் என்று அவர் நடிக்க மறுத்து விட்டாராம். காரணம், இந்த படத்தில் பெட்ரூம் காட்சிகளும் உள்ளதாம். ஆனால் சதாவைப் பொறுத்தவரை விலைமாது வேடம் என்றால் இந்தமாதிரியான காட்சிகளெல்லாம் இருக்கத்தான் செய்யும் என்று கேசுவலாக சொன்னபடி அந்த மாதிரியான காட்சிகளிலும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம்.