மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கும் 'விவேகம்' பட நாயகி காஜல் அகர்வால் ஏற்கெனவே 50 படங்களை நடித்து முடித்துவிட்டார். முதலில் கொஞ்சம் குண்டாக இருந்த காஜல் தற்போது உடல் இளைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார். 30 வயதைக் கடந்தாலும் முன்பு இருந்ததை விட கொஞ்சம் வயது குறைந்தவராகவே தெரிகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது 20 வயது பெண்ணாகவே தெரிந்தார்.
தமிழில் அடுத்து விஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் மிகவும் எதிர்பார்க்கிறார் காஜல். அடுத்து தெலுங்கில் 'எம்எல்ஏ' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இன்னும் 50 படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசையை சமீபத்தில் தெரிவித்திருக்கிறார் காஜல்.
கிளாமரான தோற்றத்தில் மட்டுமல்லாமல், நன்றாக நடிக்கவும், நடனமாடவும் தெரிந்த காஜல் அகர்வால் இன்னும் ஐந்து வருடங்கள் கூடத் திரையுலகில் தாக்குப் பிடித்து இருக்கலாம். அதே சமயம், தற்போதைய முன்னணி ஹீரோக்கள் படத்திற்குப் படம் புதிய ஹீரோயின்களுடன் நடிப்பதை அதிகம் விரும்புவதால் அந்த வாய்ப்புகள் காஜலுக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இருந்தாலும் 100 படங்களில் நடித்து முடிக்கும் ஆசையில் நம்பிக்கையுடன் இருக்கிறார் காஜல் அகர்வால்.