Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிவின்பாலி படத்தில் 'லைப் ஆப் பை' டீம்

05 செப், 2017 - 16:30 IST
எழுத்தின் அளவு:
Life-of-Pi-team-in-Nivin-pauly-film

தற்போது நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ். கிட்டத்தட்ட மொட்டை தலையுடன், பரட்டை தாடியும், மீசையுமாக, மூக்கில் 'புல்லாக்கு' குத்திக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தருகிறார் நிவின்பாலி.

இந்தக்கதை சிறுவயதிலேயே காணாமல் போன தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதை. படம் முழுவதும் கிட்டத்தட்ட பயணத்திலும் தேடலிலுமே இருக்கும். பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் 'மூத்தோன்' படத்தின் திரைக்கதை ஆசிரியராக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

யதார்த்தமும் மாய யதார்த்தமும் (நிஜமும் பொய்யும்) சந்திக்கும்போது என்ன நிகிழ்கிறது என்பதன் பின்னணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறதாம். அதனால் இந்தப்படத்தில் வி.எப்.எக்ஸ் பணிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறதாம். ரசிகர்களின் மனதை அள்ளிய 'லைப் ஆப் பை' படத்திற்கு பணியாற்றிய வி.எப்.எக்ஸ் டீம் தான் இந்தப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை திறம்பட மேற்கொண்டிருக்கிறது. இதற்கு முன் 2015ல் மலையாளத்தில் உருவான 'லார்டு லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' (LL7K) என்கிற படத்திற்கும் இந்த டீம் தான் கிராபிக்ஸ் பணிகளை கவனித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in