தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2013ம் ஆண்டு உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேதர்நாத் கோவில் உட்பட பல சேதங்கள் ஏற்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினார். ஆயிரக்கணக்கான பேர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து அபிஷேக் கபூர், "கேதர்நாத்" என்ற படத்தை இயக்குகிறார். சுசாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, சைப் அலிகானின் மகள், சாரா அலிகான், ஹீரோயினாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டரில், பின்னணியில் சுசாந்த், சாராவின் நெற்றியில் முத்தமிட, அத்துடன் கேதர்நாத் கோவில், மலை, மழை வெள்ளம், சிவன் சிலை தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு என பல விஷயங்களை பதிவிட்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஜூனில் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.